சூப்பர்..தமிழகத்தில் 15 நாட்களில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு !

தமிழகத்தில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும்.

இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரையுடன் தொடங்கியது.இந்த உரையில் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் தமிழக அரசு அரிசி அட்டைத்தாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.

முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.