அமெரிக்கா நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா நடைபெற்றது !

இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் உலகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுவருகிறது.மக்கள் ஒவ்வொருவரும் யோகாவை தனது வாழ்நாளில் கடைபிடிக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கராந்தி என பெயரிடப்பட்டது. இதில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.