அடுத்து வருகிறது டெங்கு ஆபத்து !

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இன்று வரை கொரோனா பிடியில் இந்தியா உள்ளது.இதனிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி .

இந்நிலையில்,செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது.

மேலும் இதனால் பல பேர் இறந்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத்தில் 58 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி நாட்டு மக்களை பீதியில் ஆய்தியுள்ளது.

இந்த காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளது.அந்த மாவட்டம் முழுவதும் 95 சுகாதார முகாம்கள் செயல்பட்டு வருகின்றன என்று அரசு தெரிவித்துள்ளது.மேலும் அம்மாநில அரசு வீடுகளில் தண்ணீர் தேங்குவதை சரிபார்க்க குழுக்களை அமைத்துள்ளனர்.

இதையும் படிங்க :‘சின்னதல’ ரெய்னா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறியது