உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை தொடர், வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா.டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுள் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற மலிங்காவுக்கு அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது தனது ட்விட்டர் பதிவில்,எனது டி20 ஷுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றிகள். வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அடுத்து வருகிறது டெங்கு ஆபத்து



