தமிழக அரசியலின் ஒவ்வொரு நிகழ்வையும் ரஜினி உன்னிப்பாக கவனித்துவருகிறார்.மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் கட்சி தொடங்கப் போகும் அறிவிப்பை முறைப்படி அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் .
இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்த கட்சி பதிவு செய்யப்பட்ட முகவரியில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் வீடு இருப்பது தெரியவந்தது.மிக விரைவில் ரஜினி அதிகார பூர்வமாக தன் கட்சியின் பெயர் அறிவிப்பார்.



