நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகளுமான நடிகை நிஹாரிகா தெலுங்கின் முன்னணி நடிகை.2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நிஹாரிகா.ஆந்திராவில் குண்டூர் ஐ.ஜியின் மகனான சைதன்யா மற்றும் ஹாரிகா இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது.நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
இவரது பெரியப்பா சிரஞ்சீவி, பவன் கல்யாண் இருவரும் முன்னணி நடிகர்கள்.இவரது சித்தப்பா மகன் ராம் சரண் மட்டுமின்றி, நிஹாரிகாவின் உடன்பிறந்த அண்ணன் வருண் தேஜ்ஜும் தெலுங்கின் முன்னணி நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.புகைப்படங்களோடு நிஹாரிகாவின் திருமணப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.





