சிறுநீர் கழிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை அறியலாம் !

ஒரு சராசரியான நபர் ஒரு நாளில் நான்கு முதல் பத்து முறை வரை சிறுநீர் கழிக்க வாய்ப்புள்ளது. 24 மணி நேரத்தில் ஆறு முதல் ஏழு முறை வரை கழிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சிறுநீரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கழிப்பது சாதரண விஷயமாக கருத முடியாது. நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால்.