ரஜினி உடல்நிலை குறித்து அப்போலோ கூறுவது என்ன?

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மதியத்திற்கு மேல் அறிவிக்கப்படும், அவரது உடல்நிலை பயம்படும்படி ஒன்றுமில்லை என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில், பங்கேற்றிருந்த நடிகர் ரஜினி காந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய உள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவமனை கூறியது. .

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் கூறினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் நலம் விசாரித்தனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் , கமல்ஹாசன் ஆகியோரும் ரஜினி குணம் பெற வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே ரஜினிகாந்த் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்திற்கு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று காலை தான் வந்துள்ளன. பரிசோதனை முடிவுகளில் அவருக்கு பயம்படி ஒன்றிமில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்கள் குழுவானது ரஜினியை மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பிற்பகலில் முடிவெடுப்பர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.