தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே பெருமை அதிமுக-வுக்கு உள்ளது- எடப்பாடி

இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சரான ஒரே கட்சி அதிமுக தான் என்று ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக-வின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுகூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே பெருமை அதிமுக-வுக்கு உள்ளது. தலைவர்கள் மறைவிற்கு பின் மூன்றரை ஆண்டுகாலம் தமிழகம் சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்-க்கு வாரிசுகள் இல்லை, தொண்டர்கள் தான் அவர்கள் வாரிசு.