ராஜஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றின் வழியாக, கோவில் ஒன்றுக்கு 46 பக்தர்கள் படகில் சென்றனர். அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஆற்றில் விழுந்தோரை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

மீட்பு நடவடிக்கையின் போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.