சி.எஸ்.கே அணி வீரருக்கு கொரோனா – கலக்கத்தில் ரசிகர்கள்

சி.எஸ்.கே அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க சி.எஸ்.கே வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவலை தடுக்க முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு முறை கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் சி.எஸ்.கே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் 12 நிர்வாகிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் சி.எஸ்.கே அணி வீரர்கள் அனைவரும் மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல் நீட்டிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நெகட்டிவ் வந்த வீரர்கள் கடந்த வாரம் பயிற்சியை தொடங்கினர். கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட தீபக் சஹர் மற்றும் ரித்துராஜ் ஆகிய இருவரும் பயிற்சியை தொடங்காமல் இருந்தனர்.

தீபக் சஹருக்கு மேலும் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு தொற்று இல்லை என உறுதியானதும் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. இதனையடுத்து சஹர் தனது அணியுடன் பயிற்சியை தொடங்கினார்.

இதனிடையே ரித்துராஜூக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். ரித்துராஜூக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்று சி.எஸ்.கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் அவருக்கு கொரோனா நெகடடிவ் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.