ராகுல் காந்தி கலந்து கொண்ட யூடியூபில் பிரபலமான கிராமத்து சமையல் சேனல் !

மூன்றுநாள் பயணமாக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஐந்து மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார்.இந்த முறை ராகுலின் பரப்புரை அனைவரையும் ஈர்த்தது.மேலும் தமிழ் மொழி,கலாச்சாரம் மற்றும் திருக்குறள் பற்றியும் பேசினார்.

மேலும் கரூர் சென்ற ராகுல் காந்தி ராகுல் காந்தி கிராமத்து சமையல் (village cooking )என்ற சேனல் யூடுபியில் மிகவும் பிரபலம் அந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காளான் பிரியாணியை அவர்கள் செய்துவதை பார்த்து மேலும் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, யூ-டியூபில் வெளியான சில மணி நேரத்தில் இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.ராகுல் காந்தி சாமானிய மக்களுக்கு சென்று உரையாடி பேசிய விதம் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.