ஓமம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா !

ஓமம் நமது வாழ்வில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் எடுத்துக்க கூடியது.இதில் நிறைய மருத்துவ குணாதிசயங்கள் உள்ளன.இந்த ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் எடை அதிகம் உடையவர்கள் நீங்கள் உங்கள் இடையை குறைக்க விரும்பினால் ஓமத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து அதை வடிகட்டி குடித்து வர உடல் எடை குறை உதவும் மேலும் அது மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

ஓமத்தினை தேவையான அளவிற்கு நீர்விட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.மற்றும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் நன்றாக சேர்த்து வாணலியில் சிறிது நேரம் கிண்டி களிம்பு போல் ரெடி செய்து வீக்கங்கள் உள்ள இடங்களில் வைத்து எடுக்கவேண்டும் இப்படி செய்தல் வீக்கம் விரைவில் குணமாகும்.

ஓமநீர் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு குறிப்பாக வயிற்றுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே கொடுக்க வேண்டும் .