பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிசெய்த நட்டா

பாஜக-அதிமுக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக-அதிமுக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். 


அதற்கு பாஜகவை ஆதரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலைவாய்ப்புத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்றார்