நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – தமிழகம் !

தமிழகம் முழுவதும் நாளை ஜனவரி 31 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது.

இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் .மேலும் கரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவமனைகளில் போட்டிருந்தாலும் மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் சுமார் 2 லட்சம் சுகாதார ஊழியர்கள் இந்த சொட்டு மருந்து முகாம்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.