அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி !

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி வந்தார்.

மேலும் அங்கே ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருந்த நிலையில் ராகுலும் கலந்துகொண்டார்.ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நீண்ட நேரமாக இருவரும் பேசி கொண்டனர்.

இதையடுத்து மேடையில் பேசிய ராகுல்காந்தி,இது ஒரு நல்ல அனுபவம்.தமிழக பாரம்பரிய ஜல்லிகட்டு போட்டியை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது .தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு சிறப்பானது அதனை கொண்டாட வந்திருக்கிறேன்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்துவருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை நான் தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை.பிறகு அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார்.