சூரிய ஒளியால் கைகள் கருமை ஆகிறதா.. இதை ட்ரை பண்ணுங்க !

பெண்கள் அதிக நேரம் முகத்தில் தான் கவனம் செலுத்துவார்கள்.ஆனால் கைகளுக்கும் கவனம் செலுத்தினால் தான் பார்க்க அழகாக தெரியும் இல்லை என்றால் முகம் ஒரு நிறத்தில் கை ஒரு நிறத்தில் இருக்கும்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொது கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் போட்டுக்கொள்ளவேண்டும்.அதிகப்படியான வெயிலில் சென்றால் நேரிடையாக சூரிய ஒளியிலிருந்து கதிர் வீச்சுகள் நம் சருமத்தில் படுகிறது.இதனால் சருமம் பாதிப்பை சந்திக்கிறது.

கைகளை அழகுபடுத்த முதலில் நாம் செய்யவேண்டியது கை நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும் அல்லது நகங்களை வெட்டி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

மாதம் ஒரு முறை கைகளுக்கு மெனிக்யூர் வீட்டிலே செய்யலாம்.முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மிதமான சுடுதண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின் மையலிடு ஷாம்பு அல்லது பேபி ஷாம்பு ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.பிறகு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு அந்த நீரில் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த நீரில் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து கைகளை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பிறகு சுத்தமான நீரால் கைகளை கழுவ வேண்டும்.

பின்னர் ஒரு பவுலில் 2 அல்லது 3 ஸ்பூன் காபி பவுடர், 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் மூன்று ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை கைகளில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு கைகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி மாதம் ஒரு முறை செய்தல் கைகள் அதிக கருமை ஆகாது.