‘வந்தா ராஜாவாதான் வருவேன்’படத்துக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஈஸ்வரன்.
நந்திதா, நிதி அகர்வால் என இரு நாயகிகள். நந்திதாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அவரை விட நிதி அகர்வாலுக்கு ஓரிரு காட்சிகளே அதிகம். அதுவும், விலகி விலகிப் போகும் சிம்புவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் டெம்ப்ளேட் நாயகி பாத்திரம்தான்.
மேலும் பாரதிராஜாவுக்கு உறுதுணையாக இருக்கும் சிம்பு, அவர் குடும்பத்தை ஆபத்துகளில் இருந்து காக்கப் போராடினால் அதுவே ஈஸ்வரன் படம்.




