குடியரசு தலைவரை சந்தித்த பிறகு ராகுல் காந்தி

இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையில் பின்வாங்குவதற்கோ, சமரசத்துக்கோ இடமில்லை என்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமான கோரிக்கைக்காக நடக்கிறது. இப்போது அவர்கள் பின்வாங்கினால் எப்போதுமே அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியாது. அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து துணையாக இருப்போம்,” என்று தெரிவித்தார்.