தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கன்னத்தில் நகக் கீறல்

சின்னத்திரை நடிகை சித்ரா ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது கன்னத்தில் நகக்கீறல் வந்தது எப்படி என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சித்ராவின் உயிரிழப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும். இளம் வயதில் நடிகை சித்ரா மரணமடைந்திருப்பது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.