வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்துள்ளது – சென்னை வானிலை மையம்

சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் பெய்திருக்கும் மழையளவானது 102.9 செ.மீ. ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காயல்பட்டனத்தில் 7 செ.மீ., கோத்தகிரி, குன்னூரில் தலா 5 செ.மீ., திருச்செந்தூரில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என கூறப்பட்டு உள்ளது.