புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தேர்வு குறித்த அறிவிப்பு !

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு மூலம் படங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பில் இதர கல்வி ஆண்டுகளுக்கு செமஸ்டர் தேர்வில்லை.

அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் தரப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது.டந்த 19ம் தேதிமுதல் அனைத்து தியரி தேர்வுகளும் ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

கல்லூரி முதல்வர்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள், மாணவர்கள் ஏ4 அளவு வெள்ளை காகிதத்தில் கருப்பு மை கொண்டு எழுதலாம். 3 மணி நேர காலத்திற்குப் பிறகு மாணவர்கள் அவர்கள் எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து கல்லூரி முதல்வருக்கு 30 நிமிடங்களுக்குள் அனுப்பலாம்.

இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாண்டு செமஸ்டர் வரும் ஜூலை 27 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.