தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் அணிகள் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாகி உள்ளன. ஏற்கனவே டி.சிவா, ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து இருந்தனர்.

தற்போது டி.ராஜேந்தரும் தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.ராஜேந்தர் ஏற்கனவே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறார். இந்த சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு சங்கங்களில் பொறுப்பேற்க கூடாது என்று விதி உள்ளது. இந்த விதியை தற்போது மாற்றி உள்ளனர். அதாவது வேறு சங்கங்களிலும் பொறுப்புக்கு வரலாம் என்று செயற்குழுவை கூட்டி திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேட்டபோது “தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும்படி தயாரிப்பாளர்கள் பலர் என்னிடம் வற்புறுத்துகின்றனர். இதுகுறித்து ஆலோசித்து வருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here