காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகல்

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு நீக்கபட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து விலகினார்.

பிரபல நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது அவர் திமுகவில் சேர்ந்தார்.”நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது “திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

அதே ஆண்டு 2014 இல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது அவர், “நான் இறுதியாக நான் சொந்த வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். இந்திய மக்களுக்கு நல்லது செய்து நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான்” என கூறினார்.

குஷ்பு 2014 முதல் ஆறு வருடங்களுக்கு மேலாக காங்கிரசில் இருந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, பாஜகவில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், குஷ்பூ இந்த தகவலை மறுத்து வருகிறார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் குஷ்பூ கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், குஷ்ப்ய் இன்று டெல்லி சென்றுள்ளதாகவும் நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு No comments என அவர் பதிலளித்தார். காங்கிரசில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நடிகை குஷ்பு அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here