இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்கள் இடையில் கலவரம் – அமெரிக்கா !

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தின் அருகே இஸ்ரேல் ஆதரவாளர்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் வன்முறை வெடித்தது.

இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்றும், இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அறிவித்து உள்ளது.இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இன்று அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.