கோவையில் 6 பேருக்கு கரும்பூஞ்சை நோய்

கோவையில் ஆறு பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளைத் தாக்கும் கரும்பூஞ்சை என்ற நோய் பரவி வருவதாகவும்; இது, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நோய் எனவும், சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், ‘கோவையில் ஆறு பேருக்கு கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என, தெரிவித்துள்ளார். இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.