ஆக்ராவில் பிரியங்கா காந்தி மீண்டும் கைது

உபி காவல்துறை காவலில் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருண் வால்மீகி என்ற இளைஞர்.. ஆக்ராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், ஆதாரங்களைச் சேகரித்து வைக்கும் கட்டிடத்தில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார்.

அந்த குடோனில் 25 லட்சம் ரூபாய் திடீரென திருடு போனது… இந்த பணம் திருடு போனது தொடர்பாக துப்புரவு தொழிலாளி அருண் வால்மீகியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.இப்படிப்பட்ட சூழலில், மர்மமாக இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் ஆக்ரா நோக்கி சென்றார்… அப்போது அவரை லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர்… இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது… போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.

தற்போது 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உரிய அனுமதி இல்லாமல் பிரியங்கா அங்கு வந்ததாலும், தடுத்து நிறுத்தப்பட்டதாக உபி போலீசார் விளக்கம் தந்தனர்.. இது மாவட்ட கலெக்டரின் உத்தரவு என்று கூறி பிரியங்காவை தடுத்தனர்… அதையும் மீறி பிரியங்கா புறப்பட முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர். பிரியங்கா கைது செய்யப்பட்டதுமே பெரும் பரபரப்பு மீண்டும் எழுந்தது.. “நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்கு பதிவு..!