பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள்…!

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பா.ஜனதாவினர் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் அடுத்த மாதம் அக்.2ஆம் தேதி வரை, அதாவது சுமார் 3 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்களை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இதையொட்டி, பா.ஜனதாவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கு வருகின்றனர். குறிப்பாக, சுற்றுப்புற பாதுகாப்புக்காக நகர்ப்புற மக்களுக்கு துணிப்பைகள் வழங்குதல் மற்றும் இலவச கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல், ரத்த தானம், பிளாஸ்மா தான முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தியாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாசத்தின் ஒரு இலட்சியத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதும், தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் பிறந்த நாள், ஒரு அற்புதமான ஆண்டிற்கான எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வவல்லமையுள்ளவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here