கொரோனா உயிரிழப்புகள் – டாக்டர்கள் மீது பழியை போடும் டிரம்ப்

இதய பிரச்னை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடைசி கட்டத்தில் இருப்பவர்கள் கொரோனா தொற்றினால் இறக்கின்றனர். அவர்கள் உயிரை கொரோனா பறித்தது போல் டாக்டர்கள் கணக்கு எழுதுவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகத்திலேயே தொற்று நோய் பாதிப்பில் உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த பாதிப்பு தேர்தலில் தனக்கு எதிராக திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார் டிரம்ப். உலகிலேயே அமெரிக்காவில் தான் பரிசோதனைகள் அதிகம் நடைபெறுவதாக கூறியுள்ளார். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பிற நோய்கள் இருந்து அவர்கள் கொரோனா தொற்றினால் இறந்தால் முதன்மை நோயினால் இருந்ததாகவே கணக்கில் கொள்கின்றனர்

கொரோனாவால் யாராவது உயிரிழந்தால் டாக்டர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்பதால் இங்கு எண்ணிக்கையை அதிகரித்து காட்டுகின்றனர். தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு நானே சாட்சி. இவ்வாறு கூறியுள்ளார்.