நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை

நடிகர் யோகிபாபுவுக்கு சீரியல் நடிகை ஜோடியாகவுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மண்டேலா. முடிதிருத்தும் தொழிலாளியை பற்றிய காமெடி கலந்த படமாக இந்த படம் தயாராகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. மண்டேலா திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது