மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜ., மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றி தொடர்ந்து பா.ஜ., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பதவி வகித்தவர் இல.கணேசன்.