எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்ய போகிறாரா வெங்கையா நாயுடு?

சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம். இரண்டு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. ராஜ்யசபாவில் திரிணமுல் எம்.பி.,க்கள் மேஜை மேல் ஏறி கோஷமிட்டனர். ஒருவர் நடனம் ஆடினார்; சிலர் விசிலடித்தனர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இதைப் பார்த்து கண்ணீர் விட்டார். பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்தார்.

பா.ஜ., மற்றும் காங்., மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தியதை அடுத்து, ராஜினாமா முடிவை கைவிட்டார். இதற்கிடையே சபையில் கடும் அமளியில் ஈடுபட்ட சில எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் வெங்கையா நாயுடு.