பானி பூரியில் சிறுநீரகம் கலந்து விற்பனை..!

பானிபூரி சாப்பிடுவதற்கு முன் கவனமாக இருங்கள். பானி பூரி விற்பனையாளர் அதன் சுவையை அதிகரிக்க பானி பூரியில் சிறுநீரை கலக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

`மாப்ளை… வா ஒரு டீயைப் போடுவோம்’ என மாலை நேரத்தில் கூட்டமாக சேரும் நண்பர்கள், ஸ்நாக்ஸ் இல்லாமல் டீ குடிப்பது கிடையாது. ஒரு காலத்தில் வடை, பஜ்ஜி, போண்டா, காராசேவு, பக்கோடா… என இருந்த நொறுக்குத்தீனிப் பழக்கம், சமீப காலங்களில் வேறு தளத்துக்குப் போய்விட்டது. அதிலும் இன்று கொடிகட்டிக் கோலோச்சும் நொறுக்குத்தீனி என்பது, நகரம் தொடங்கி சிற்றூர் வரை தெருவுக்குத் தெரு களைகட்டும் பானி பூரி வியாபாரம்.

அப்படிப்பட்ட பானி பூரியை சுத்தமாக தயாரிக்கிறார்களா என்பது எத்தனை பேருக்கு தெரியும். பானி பூரி என்பது வட இந்திய நொறுக்கு திண்பண்டங்களை இருந்தது. ஆனால், தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களின் நொறுக்கு தின்பண்டங்களில் பானி பூரி முக்கிய இடத்தை பிடிக்கிறது. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் தள்ளுவண்டி கடைகளில் வைத்துக்கொண்டும், கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கிறார்கள். புளிப்பு, காரம் என நாவில் சுவையைத் தக்கவைக்கும் பானி பூரி மொறுமொறுவாகவும் உள்ளது. அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நொறுக்கு தீண்பண்டமாக இது உள்ளது.

அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் சாலையோரத்தில் பானி பூரி விற்பனை செய்யும் ஒருவர், பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் சிறுநீரை கலக்கிறார். வியாபாரிக்கு அருகில் ஒரு வாடிக்கையாளர் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை.

இதை அப்பகுதியினர் அவரது மொபைலில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பானி பூரி சாப்பிடுவதற்கு முன் கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்களும் சிறுநீர் கலந்த பானி பூரியை குடிக்கலாம்.