டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று முதல் இந்த தோட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் இதற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தோட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்காக திறந்து திறக்கப்படும்.

மேலும் நாள் ஒன்றிற்கு ஒரு மணிநேரத்துக்கு 100 பேர் அனுமதிக்க படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் கண்டிப்பாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



