அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை – தமிழ்நாடு !

தங்கத்தின் விலை எப்படி விலை ஏற்றம் மற்றும் குறைவு ஏற்படுத்துவது போல் வெங்காயத்தின் விளையும் அவ்வப்போது ஏறி குறைகிறது.தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வருடம் தமிழகத்தின் பல பகுதிகளில் சின்ன வெங்காய பயிர்கள் மழையால் அழுகியதால் சந்தைகளில் வரத்து மிக குறைவாக உள்ளது. மேலும் அண்டை வெளிமாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரவும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்காக ரூ75 அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திண்டுக்கல்லில் இன்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ150க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ110 முதல் ரூ120 வரை விற்பனை செய்யப்படுகிறது.