உடம்பில் இருக்கும் நச்சுகளை நீக்க வீட்டிலே செய்யலாம் டிடாக்ஸ் ட்ரிங்க்ஸ் !

நாம் உணவை உண்ணும் போது அது உடலுக்கு சக்தியாக மாறும் மற்றும் கழிவு வெளியேறிவிடும்.இதில் எல்லா கழிவும் வெளியாகாது சிலது உடலில் தங்கி விடும்.இந்த நச்சு பொருட்களை வெளியேற்ற நாம் வீட்டிலே சில டிடாக்ஸ் ட்ரிங்க்ஸ் தயாரிக்கலாம்.

முதலில் பிரதமான ஒன்று தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.இதனால் உடல் சூடு தணியும் மேலும் நச்சுக்கள் தாங்காமல் வெளியேறிக்கொண்டே இருக்கும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் மிக சிறந்தது.ஆனால் போதிய அளவு குடிக்க வேண்டும்.

பாகற்காய் ஒரு துண்டு,புதினா இலை,கொத்தமல்லி,வெள்ளெரிக்காய் மற்றும் கருவேப்பில்லை இவை அனைத்தும் அரைத்து ஜூஸ் செய்து வடி கட்டி குடித்து வந்தால் உடலில் நச்சுகள் தாங்காது மேலும் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.

வெயில் காலம் வந்த பிறகு தினமும் எலுமிச்சை பழ ஜூஸ் குடித்து வரலாம்.லவங்கப்பட்டையை போடி செய்து வைத்து கொள்ளவும் ஒரு கிளாஸ் தண்ணீரை சுடவைத்து அதில் சிறிதளவு இந்த பொடியை போட்டு கொதிக்கவிடவும்.மேலும் குடிக்கும் பதம் வந்த பிறகு அதில் தேன் கலந்து குடித்து வரலாம் இதுவும் ஒரு நல்ல டிடாக்ஸ் ட்ரிங்க்.