பொங்கல் சிறப்பு பேருந்துகள் -தமிழ்நாடு !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் இந்த வருடம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், அந்த துறைக்கான செயலர் சமயமூர்த்தி, கூடுதல் தலைமைச் செயலர், போக்குவரத்து ஆணையர் ஜவகர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் 13 வரையில் தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் 4,078 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற பகுதிகளிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, ஜனவரி 17ஆம் தேதி முதல் 19 வரையில் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார்.