பொங்கல் பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு !

சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறகு இருப்பாளியில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்தார்.அங்கு வழங்கிய சிறப்புரையில் ” மக்கள் தைப் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, 2 கோடியே 6 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500, அரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு கரும்பு ஜனவரி நான்காம் தேதி முதல் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்தார் . இந்தத் திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இந்த ஜெயலலிதா அரசு நிறைவேற்றிவருகிறது. அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும் என கேட்டீர்கள். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது .இதுபோன்ற பொதுமக்கள் வைத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றிவருகிறோம் என்றார் .