புத்துணர்ச்சியோடு இருக்கணுமா கொண்டைக்கடலை சாப்பிடுங்கள் !

கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய்,மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.இதில் ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.