மதுரையில் ரவுடி படுகொலை

பொன்மேனி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தப் படுகொலை முன்விரோதத்தின் காரணமாகவே அரங்கேறியதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்தது யார் என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.