ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும்- மம்தா பானர்ஜி

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;

”பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன். ஜே.பி.நட்டாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகளும் உடனிருக்கும். ” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.