பாஜக-பாமக தொகுதி பங்கீடு -புதுவை !

புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் , தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக-பாமக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பாமக தரப்பில் 10 தொகுதிகளை கோர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 5 தொகுதிகளை நிச்சயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில பாமக அமைப்பு செயலாளர் தன்ராஜ் கூறியது , புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பத்து தொகுதிகளை கேட்க விரும்பினோம் ஆனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நலன் கருதி, தற்போது 5 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதில், புதுச்சேரியில் 4 தொகுதிகளும், காரைக்காலில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறினார்.