தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக மற்றும் திமுக காட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி பேசியது , தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றார்.
மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி, அறிவித்தார்.



