மீண்டும் தலைதூக்கும் கரோனா தொற்று – தமிழகம் !

கரோனா தொற்று உலகத்தை தாக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.ஆனால் மக்கள் சரியாக கடைபிடிப்பது இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் ,தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 567 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், எப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.