பிரதமர் அறிவித்த விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம் !

கரோனா தொற்று இந்தியாவை தாக்கி வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் கரோனா 3 ம் அலை கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. 

4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.தற்போது விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.

இதன்மூலம்,9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.