பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு!

கொரோனா பரவல் அதிகரித்தையடுத்து தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 12-ம் தேதி தலைமைச் செயலர். அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

+2 தேர்வு ஒத்திவைப்பு:

கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் + 2 மாணவர்களுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் செயல்முறை தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அத்தேர்வு எப்போது நடத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.