தமிழகத்தில் செப்.30 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை !

எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் வாங்கும் அணைத்து பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் தன் கிடைக்கிறது.இது சுற்றுச்சுழலை மிகவும் பாதிக்கும் ஒன்றாகும்.

2019ம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதற்கு பதிலாக துணி பைகள் ,பாக்குமர இலை, கொண்டு மக்கள் பயன்படுத்திவந்தனர்.மேலும் சாலை ஓரங்களில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் பைகளால் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது . மேலும் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 2023ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.