போதைப்பொருள் வழக்கு: நடிகர் ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்காக நேரில் ஆஜர் !

பாலிவுட் சினிமா துறையில் தான் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது என்று கூறுவார்கள்.தற்போது சாண்டில்வுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் இந்த ஆதிக்கம் உள்ளது என்பது வியப்பில் ஆய்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ரகுல் ப்ரீத் சிங் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலத்திற்கு நேரில் ஆஜராகியுள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஏஜென்சி அதிகாரிகளிடம் ஆஜராக ஹைதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் ஆஜரானார்.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.