பெண்ணுக்கு பன்றியின் கிட்னி பொருத்தி சாதனை

உலகில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பன்றி கிட்னியை பொருத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சாதனை செய்துள்ள தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது பொதுவாக மருத்துவருக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். உடல் உறுப்பு சரியாக பொருந்த வேண்டும், ஒரே வகை இரத்தம் இருக்க வேண்டும் உள்பட பல்வேறு குறிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் சோதனைகள் நடைபெற்று வருகிறது என்றும் இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் மனிதர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை மாற்று அறுவை சிகிச்சைக்காக தேவைப்படுபவர்களுக்கு விலங்குகளிலிருந்து மிக எளிதாக எடுத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகில் முதல் முறையாக பன்றியின் கிட்னியை பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் கிட்னி செயல் இருந்த காரணத்தினால் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து அவருடைய உறவினர்களின் அனுமதியைப் பெற்று சோதனை முயற்சியாக அவருக்கு பன்றியின் கிட்னியை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த நோயாளியின் ரத்தக்குழாய்கள் பன்றியின் கிட்னியை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும் தொடையின் மேல் படுக்க வைத்து அவரது ரத்த குழாய் உடன் மூன்று நாட்கள் பராமரிக்க பட்டதாகவும் அந்த மூன்று நாட்களும் மனிதனைப் போலவே பன்றியும் கிட்னி செயல்பட்டதாகவும் இதனையடுத்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் நீண்ட நாட்களுக்கு சோதனை செய்து மனிதர்களுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் முயற்சியை வருங்காலத்தில் செய்வார்கள் என்றும் இதனால் லட்சக்கணக்கானோர் உடல் உறுப்புகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்