மளிகைக் கடையில் ஏடிஎம் வசதி

ஏடிஎம்கள் பொதுமக்களுக்கு மிக அவசியமான சேவையாக திகழ்கின்றன. அவசர தேவைகளுக்கு பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை ஏடிஎம்கள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில், மளிகைக் கடைகளே ஏடிஎம் போல இயங்கி வருவது உங்களுக்குத் தெரியுமா?

இந்த அட்டகாசமான திட்டத்தை பாரத் ஏடிஎம் (Bharat ATM) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு கடைகள், மளிகைக் கடைகள் கூட ஏடிஎம் போல செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் ஏராளமான மளிகைக் கடைகளுடன் பாரத் ஏடிஎம் கூட்டணி அமைத்துள்ளது.

இச்சேவையை பயன்படுத்த விரும்புவோர் மொபைலில் பாரத் ஏடிஎம் ஆப் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். ஈசியாக அருகே உள்ள மளிகைக் கடை மூலம் பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது, கடனுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம்.

முதலீடு, கடன், ரெகரிங் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் பாரத் ஏடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் வருமானம் கிடைப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏடிஎம் சேவை எளிதாக கிடைக்காத கிராமப்புற பகுதிகளில் மளிகைக் கடை வாயிலாகவே ஏடிஎம் சேவைகளை பயன்படுத்த பாரத் ஏடிஎம் பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க: 4 மாதங்களாக சம்பளம் இல்லை- ஆப்கன் ஆசிரியர்கள்